Tuesday, February 14, 2017

முரண்டு பிடிக்கும் சசிகலா

DINAMALAR 

சென்னை: சுப்ரீம் கோர்ட்டால், ‛குற்றவாளி' என, முத்திரை குத்தப்பட்ட பிறகும், சசிகலா முரண்டு பிடிக்கிறார். கூவத்தூர் சொகுசு விடுதியில் இருந்து அவர் வெளியேற மறுப்பதால் போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நகர மறுப்பு

சொத்து குவிப்பு வழக்கில், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என சுப்ரீம் கோர்ட் இன்று காலை, 10:38 மணிக்கு அறிவித்தது. இதன் பிறகு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு தொற்றி கொண்டது.

நேற்று மாலை முதல் கூவத்தூர் சொகுசு விடுதியில் எம்.எல்.ஏ.,க்களுடன் தங்கி உள்ள சசிகலா தற்போது அங்கிருந்து நகர மறுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் உட்பட மூன்று பேரும், பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என பெங்களூரு உயர்நீதிமன்ற பதிவாளர் கூறி விட்டார்.

ஆனால், சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சசிகலா தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஜாமின் கேட்கவோ, மறுசீராய்வு மனு தாக்கல் செய்யவோ சட்டத்தில் இடம் இல்லை, என சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆச்சார்யா கூறியுள்ளார். ஆனால், தம்பிதுரை, நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட சசிகலா ஆதரவாளர்கள் தொடர்ந்து பிடிவாதமாக இருந்து வருகின்றனர்.

பாதியில் நிறுத்தம்

எம்.எல்.ஏ.,க்களை சந்திக்க முதல்வர் பன்னீர்செல்வம் கூவத்தூர் செல்கிறார் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால், அமைச்சர் பாண்டியராஜன், முன்னாள் அமைச்சர் முனுசாமி உள்ளிட்ட சிலர் தான் அவர் தரப்பில் கூவத்தூர் புறப்பட்டனர். கூவத்தூர் விடுதியில் இருந்து சசிகலா வெளியேறும் வரை வர வேண்டாம் என கூறி அவர்களை கிழக்கு கடற்கரை சாலையில் கோவளத்தில் தடுத்து நிறுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நேரத்தில், சென்னையில் கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் முதல்வர் பன்னீர்செல்வம், போன் மூலம் சிலருடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

How did you open customer’s locker without consent? U’khand HC to bank

How did you open customer’s locker without consent? U’khand HC to bank Pankul.Sharma@timesofindia.com 16.04.2025 Dehradun : Uttarakhand high...