Wednesday, September 20, 2017

மாவட்ட செய்திகள்

போலி டாக்டருக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை ஓமலூர் கோர்ட்டு தீர்ப்பு



போலி டாக்டருக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து ஓமலூர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

செப்டம்பர் 20, 2017, 04:30 AM
ஓமலூர்,

சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த டேனிஸ்பேட்டை ஊராட்சி பாலமேடு பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி, கூலித்தொழிலாளி. இவர் கடந்த 15.4.2010 அன்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு, டேனிஸ்பேட்டையில் உள்ள ஒரு கிளினிக்கில் சிகிச்சை பெற்றார்.

அப்போது சிகிச்சை அளித்தவர் போலி டாக்டர் என சந்தேகம் அடைந்த பழனிசாமி, தீவட்டிப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட கிளினிக்கில் சோதனை நடத்தி விசாரித்தனர்.

விசாரணையில், அங்கு மருத்துவம் பார்த்து வந்த காடையாம்பட்டி கோட்டேரி கரை பகுதியைச் சேர்ந்த முருகேசன்(வயது 47) என்பவர் 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளார் என தெரியவந்தது. இதையடுத்து போலி டாக்டர் முருகேசனை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை ஓமலூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட முருகேசனுக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து மாஜிஸ்திரேட்டு ரமேஷ் தீர்ப்பு கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024