Sunday, October 22, 2017

விமானத்தில் தீப்பற்றி எரிந்த மொபைல் போன்


புதுடில்லி:டில்லி - இந்துார் இடையிலான, 'ஜெட் ஏர்வேஸ்' தனியார் விமானத்தில், பயணி ஒருவரது மொபைல் போன், திடீரென தீப்பற்றி எரிந்தது.

டில்லியிலிருந்து, ம.பி., மாநிலம், இந்துாருக்கு, நேற்று முன்தினம் இரவு, ஜெட் ஏர்வேஸ் தனியார் விமானம், 120 பயணியருடன் சென்று கொண்டிருந்தது. அப்போது, பயணி ஒருவரது மொபைல் போன், திடீரென, தீப்பற்றி எ ரியத் துவங்கியது. இதனால், பயணியர் மத்தியில் அதிர்ச்சியும், பரபரப்பும் காணப்பட்டது.இதையடுத்து, விமானத்தில் இருந்த, தீயணைக்கும் கருவியை இயக்கியபோது, அது, வேலை செய்யவில்லை. இதனால், ஒரு டிரேயில், தண்ணீரை கொட்டி, அதில், மொபைல் போனை போட்டு, தீ அணைக்கப்பட்டது.

சிறிது நேரத்தில், அந்த விமானம், பத்திரமாக, இந்துாரில் தரை இறங்கியது. விமானத்தில் இருந்த தீயணைக்கும் கருவி, வேலை செய்யாதது குறித்து, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு எதிராக புகார் அளிக்கப் போவதாக, பயணியர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Pilots drank bottled water purchased from outside vendor

Pilots drank bottled water purchased from outside vendor  The pilots also consumed bottled water purchased from an outside vendor.  British ...