8 பெருசா? 124 பெருசா? ' - ஜெயக்குமார்
அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக நேற்று தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆளுநரைச் சந்தித்தார். அவருடன், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ராஜ்யசபா உறுப்பினர் நவநீத கிருஷ்ணன் உள்பட 10 பேர் ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்தனர்.
இதையடுத்து, ஆளுநரைச் சந்தித்தப் பின் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 'எங்கள் ஆதரவு எம்.எல்.ஏக்கள் பட்டியலை ஆளுநரிடம் வழங்கினோம். அதை ஆவன செய்வதாக ஆளுநர் கூறினார். அவர் ஜனநாயகத்தை காப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.
எங்களுக்கு 124 எம்.எல்.ஏக்கள் ஆதவராக உள்ளனர். ஆனால், அவர்களுக்கு (ஓ.பி.எஸ். அணி) ஆதரவாக 8 எம்.எல்.ஏக்கள்தான் உள்ளனர். 8 பெருசா? 124 பெருசா? நாளைக்குள் ஆளுநர் முடிவை அறிவிப்பார் என்று நம்புகிறோம் ' என்றார்.
No comments:
Post a Comment