Wednesday, February 15, 2017

ஏர்ஏஷியாவுடன் உலகப் பயணம் போலாமா?

By DIN  |   Published on : 14th February 2017 06:48 PM  |  
A320neo_Air_Asia_
விடுமுறையில் குடும்பத்துடன் சுற்றுலா செல்வதற்காக நாம் செய்யும் முன் தயாரிப்புக்களைப் பற்றி சொல்லவா வேண்டும்? அதை சரிவர செய்து முடிக்கவே சில நாட்கள் தேவைப்படும். உண்மையில் பயணத்தைவிட சோர்வடையச் செய்துவிடும் வேலை அது.
சுற்றுலா தலம் எதுவாக இருந்தாலும் அது தங்கள் பர்ஸை பதம் பார்த்துவிடும் என்று பொதுவாக உலக மக்கள் நினைக்கிறார்கள். செலவுகளை  நினைத்து சுற்றுலா கிளம்பும் முடிவையே பலர் கைவிட்டுவிடுவார்கள். எனவே பல்வேறு ஊர்களைச் சுற்றிப் பார்க்க விரும்புவோர்களுக்கெனவே ஏர்ஏஷியா களம் இறங்கியுள்ளது.
விமானப் பயணம் என்றாலே அதிக  செலவு என்ற நிலையை மாற்றியமைத்து, மனம்மகிழ் சுற்றுலாவை இனிதே கழிக்க நம்ப முடியாத அளவுக்கு குறைந்த விமானக் கட்டணங்களை நிர்ணயித்துள்ளது ஏர் ஏஷியா நிறுவனம்.
உலகமே விரும்பும் ஒரு சுற்றுலா தலம் எதுவென்று கேட்டால், கோலாலம்பூர் என்றுதான் உங்கள் பதில் இருக்கும். அத்தகைய சிறப்பு வாய்ந்த இடமான கோலாலம்பூருக்கு பயண ஏற்பாடுகளைப் பற்றிய கவலையின்றி சுலபமாகச் சென்று வருவதற்கு நிச்சயம் ஒரு கொடுப்பினை வேண்டும். அத்தகைய அற்புதமான ஓர் பயணத்தை ஏர்ஏஷியா சாத்தியப்படுத்துகிறது.
மனதுக்குப் பிடித்த சுற்றுலா இடங்களுக்கு வசதியான விமானப் பயணம் வாய்ப்பது அபூர்வம். ஏர்ஏஷியா இதற்கான தீர்வையும் அளிக்கின்றது. நிறைவான சுற்றுலாவுக்கு நிச்சயம் பணம் செலவாகும் என்பது உண்மைதான். ஆனால் அதற்காக அது பர்ஸை மொத்தமாக பதம் பார்த்துவிடும் அளவிற்கு இருக்க வேண்டாமே! அதனால்தான் ஏர்ஏஷியா தம் பயணிகளுக்கு விமானம் மற்றும் தங்குமிடங்களில் குறைந்த கட்டணங்களை மட்டுமே நிர்ணயித்துள்ளது.
மலேஷியா என்றாலே நினைவுக்கு வரும் சில விஷயங்கள் அங்குள்ள சாலையோர உணவுக் கடைகள், ஷாப்பிங் மால்கள், கண் கவரும் விதவிதமான காட்சிகள், மற்றும் பல. மலேஷியாவின் மகத்தான தலைநகரில் 900 மேற்பட்ட ஹோட்டலில் தங்குமிட வசதிகளை செய்து தர ஏர்ஏஷியாவுக்கு இயலும்.
வண்ண விளக்கு அலங்காரங்களால் ஜொலிக்கும் இடங்களை மட்டும் பார்த்தால் போதுமா என்ன? பினாங் போன்ற வெவ்வேறு நகரங்களுக்குச் செல்லவும், மற்ற ஊர்களில் கிடைக்கும் விதவிதமான உணவுகளை சுவைக்கவும், இயற்கை காட்சிகளை கண்டு மகிழவும், கடற்கரை, கடலோர மீனவ கிராமங்கள், பசுமையான அடர் காடுகள், இயற்கை எழில் கொஞ்சும் மலைப் பிரதேசங்கள், பிரசித்தி பெற்ற கோயில்கள், உயிரியல் பூங்காக்கள் போன்றவற்றை காண்பதும் சுற்றுலாவில் தவற விடக்கூடாதவைகள்தானே?
குடும்பத்துடன் செல்வதாக இருந்தாலும் சரி, நண்பர்களுடன் பயணம் என்றாலும் சரி, மலேஷியா இரண்டுக்கும் ஏற்ற இடம் என்பதில் சந்தேகமில்லை. ஒவ்வொரு சுற்றுலா பயணியின் எதிர்ப்பார்ப்பையும் முற்றிலும் பூர்த்தியாக்குவது மலேஷியப் பயணம் என்றால் மிகையில்லை.
நீங்கள் கடற்கரையை விரும்புவராக இருக்கலாம், அல்லது இரவு விடுதிக் கொண்டாட்டங்களை விரும்புவராக இருக்கலாம், அதற்கு ஏற்ற இடங்கள் கோலாலம்பூர், ஜார்ஜ் டவுன், மிரி என இன்னும் பல இடங்களில் உள்ளன.
ஏர்ஏஷியாவின் மூலம் மலேஷியாவுக்குச் செல்ல குறைந்த கட்டணம் தான் என்றாலும் நிகரற்ற பயண அனுபவம் கிடைக்கும் என்பது உறுதி. கோலாலம்பூர் போன்ற இடங்களுக்கு அதிக செலவில்லாமல் நியாயமான கட்டணங்களுடன் பயணிப்பதும் தங்குவதும் அங்குள்ள வசதிகளை அனுபவிப்பதும் என்பதே அரிய விஷயம் தான். ஏர் ஏஷியா இத்தகைய நூற்றுக்கணக்கான இடங்களுக்கு பயணிகளை அழைத்துச் செல்கிறது.
ஆகவே, உலகின் மிகக் குறைந்த விமானக் கட்டணமுடைய ஏர்ஏஷியாவில் இன்றே பயணம் செய்வீர்!

No comments:

Post a Comment

MUHS chalks out plan to prevent paper leaks

MUHS chalks out plan to prevent paper leaks  Ranjan.Dasgupta@timesofindia.com 12.01.2025 Nashik : The Maharashtra University of Health Scien...