பிப்.24 ஜெ.பிறந்தநாள்:சுவர் மற்றும் ப்ளக்ஸ் பேனர் விளம்பரத்தில் உற்சாகமிழந்த அதிமுகவினர்: சுறுசுறுப்புக் காட்டும் திமுகவினர்
- என்.முருகவேல்COMMENT
அதிமுக தலைவர்களின் பிறந்தநாள் விழாக்களை விமரிசையாகக் கொண்டாடவது அதிமுக தொண்டர்களின் வாடிக்கை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை வெகுவிமரிசையாகக் கொண்டாடிவந்த அதிமுகவினர், அவர் மறைந்த நிலையில், அவரது பிறந்தநாளையும் மறந்து விட்டார்களோ என்று விமர்சிக்கும் நிலையில் அக்கட்சியின் அண்மைக் கால நிகழ்வுகள் அமைந்துள்ளது.
இன்னும் ஒருவார காலத்தில் ஜெயலலிதாவின் 69-வது பிறந்தநாள் பிப்.24-ம் தேதி வரவுள்ளது. பொதுவாக அவரது பிறந்தநாள் என்றால் அதிமுகவினர் கேக் வெட்டுவது, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்குவது, அன்னதானம் வழங்குவது,இலவச வேட்டி சேலை, தையல் இயந்திரம் உள்ளிட்டவை வழங்குவது வழக்கம். அதற்கு முன்னோட்டமாக பல்வேறு இடங்களிலும் ஜனவரி மாதம் முதலே சுவர் விளம்பரம் செய்வதிலும், ப்ளக்ஸ் பேனர் வைப்பதிலும், அன்னதானத்திற்காக சமையல் கலைஞர்களை முன்பதிவு செய்து கொள்வது, நன்கொடை வசூலிப்பது போன்ற செயல்களில் அதீத ஆர்வம் செலுத்துவது உண்டு. ஆனால் தற்போது அதுபோன்ற எந்த நடவடிக்கைகளிலும் அதிமுகவினர் ஈடுபடவில்லை.
எதிர்வரும் நாட்களிலும் அவர்களிடம் பரபரப்பான சூழலே காணப்படும் என்றேக் கூறப்படுகிறது. தற்போது எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றுக் கொண்டாலும், அவர் தனது பெரும்பான்மையை 15 தினங்களுக்குள் நிரூபிக்கவேண்டிய கட்டாயம் இருப்பதால், எம்எல்ஏ-க்களும், கட்சி நிர்வாகிகளும் அதில் தான் தீவிரம் காட்ட நேரிடம். அதேபோன்று எதிர்முகாமில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இதே நிலை என்பதால், அவரது ஆதரவாளர்களும் ஜெ.
பிறந்தநாள் கொண்டாட்டத்தைக் காட்டிலும் பன்னீர்செல்வம் பிரச்சனையில் தான் கூடுதல் கவனம் செலுத்த நேரிடும் என்கின்றனர் அதிமுகவினர்
வடக்குத்து கிராமத்தைச் சேர்ந்த சுவர் விளம்பர ஓவியர் வடிவேல் கூறுகையில், பொங்கல் பண்டிகை முடிந்தவுடனேயே அதிமுக நிர்வாகிகள், எங்களுக்கு சுவர் விளம்பரத்திற்காக எங்களை புக் செய்துகொள்வர். தொடர்ந்து 1 மாத காலத்திற்கு எங்களுக்கு சுவர் விளம்பரப் பணி இருக்கும். அதைத்தொடர்ந்து ஸ்டாலின் பிறந்தநாளுக்கு சுவர் விளம்பரப் பணிகளை செய்வோம். ஆனால் இதுநாள் வரை அதிமுக நிர்வாகிகள் எங்களை தொடர்புகொள்ளவில்லை. மாறாக திமுகவினர் சுவர் விளம்பரப் பணியில் தீவிரம் காட்டிவருகின்றனர். இதற்குக் காரணம் ஸ்டாலின் செயல் தலைவர் என்ற கூடுதல் காரணமும் உண்டு. அதிமுகவில் நிலவும் அசாதாரண சூழலால் அக்கட்சியினர் ஜெயலலிதா பிறந்தநாளில் தீவிரம் காட்டவில்லை என நினைக்கிறேன் என்றார்.
இதுபோன்று ப்ளக்ஸ் பேனர் தொழில் செய்துவரும் குரு என்பவரு கூறுகையில், பிப்ரவரி மாதம் தொடங்கியது அதிமுக நிர்வாகிகள் ப்ளக்ஸ் பேனர் ஆர்டர் கொடுப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு இதுவரை யாரும் தொடர்பு கொள்வில்லை. அதேபோன்று திமுகவிலும், பேனர் வைக்க அக்கட்சியின் செயல் தலைவர் கட்டுப்பாடுகள் விதித்திருப்பதால், அவர்கள் சுவர் விளம்பரத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம் ப்ளக்ஸ் பேனருக்கு கொடுக்கவில்லை என்பதால், அவர்களும் ப்ளக்ஸ் பேனர் ஆர்டர் கொடுக்கவில்லை. எனவே எங்களுக்கு போதுமான வருமானம் இல்லை என்றார்.
விருத்தாசலம் அதிமுக ஒன்றிய செயலாளர் பழனிவேல்
இது தொடர்பாக அதிமுக விருத்தாசலம் ஒன்றிய அதிமுக செயலாளர் பழனிவேலுவிடம் கேட்டபோது, கட்சியின் சில கசப்பான சம்பவங்கள் நடைபெற்று இன்று தான்(நேற்று) ஒரு நல்ல முடிவு ஏற்பட்டுள்ளது.எனவே இதுநாள் வர சுணக்கத்தில் இருந்தோம். எடப்பாடியார் ஆட்சி அமைக்கவுள்ளார். தற்போது கட்சியின் துணைப்பொதுச்செயலாள்ர டி.டி.வி.தினகரன் என்ன உத்தரவிடுகிறாரோ அதன்படி மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை கொண்டாடுவோம். அப்படிக் கொண்டாடும்பட்சத்தில் கடந்த 10 ஆண்டுகளில் கொண்டாடியதைக் காட்டிலும் சிறப்பாகக் கொண்டாடுவோம்.
ஆட்சி, கட்சி இரண்டிலும் அசாதாரமான சூழல் காரணமாக அதிமுகவினர்
சுணக்கமாக இருந்துவரும் நிலையில், திமுகவின் செயல் தலைவராக ஸ்டாலின் நியமிக்கப்பட்டப் பின்னர் கொண்டாடப்படும் பிறந்தநாள் என்பதால், திமுகவினர் தொண்டர்கள் சுவர் விளம்பரத்தில் தீவிரம் காட்டிவருகின்றனர்.
வடக்குத்து கிராமத்தைச் சேர்ந்த ஓவியர் வடிவேல்
No comments:
Post a Comment