முதல்வர் பழனிச்சாமி அணியில் இன்னொரு விக்கெட் வீழ்ந்தது!
சட்டசபையில் நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களிப்பேன் என்று மயிலாப்பூர் எம்.எல்.ஏ நட்ராஜ் கூறியுள்ளது கட்சித் தலைமையை அதிர்ச்சியடையவைத்துள்ளது.
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கும், அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவுக்கும் இடையே அதிகாரப்போட்டி நடந்துவரும் நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனைபெற்ற சசிகலா, பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக அ.தி.மு.க சட்டமன்ற கட்சித்தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆளுநரின் அழைப்பைத் தொடர்ந்து முதல்வராக நேற்று பதவியேற்றுக்கொண்டார். மேலும், பதினைந்து நாள்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என முதல்வருக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, கூவத்தூரில் உள்ள கோல்டன் பே ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்களிடம் நேற்று எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இன்றும் அவர் எம்.எல்.ஏக்களைச் சந்தித்துப் பேச உள்ளார். இந்தச் சூழ்நிலையில், மயிலாப்பூர் எம்.எல்.ஏ ஆர்.நட்ராஜ், பெரும்பான்மை எங்கே இருக்கிறதோ, அந்த அணிக்கு ஆதரவு அளிப்பேன் என்று கூறியிருந்தார். நட்ராஜ் சொன்ன மாதிரி, எடப்பாடி பழனிச்சாமி அணிக்கே பெரும்பான்மை இருந்துவருகிறது. இந்நிலையில், பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்க உள்ளதாக எம்.எல்.ஏ நட்ராஜ் இன்று அறிவித்துள்ளார். 'மக்கள் விருப்பத்துக்கு ஏற்றார்ப் போல வாக்களிப்பேன். கட்சித் தாவல் சட்டத்தால் எனது எம்.எல்.ஏ பதவி போனாலும் எனக்குக் கவலை இல்லை' என்று நட்ராஜ் கூறியுள்ளார்.
நட்ராஜின் எதிர்ப்பின் மூலம் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஆதரவான எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 124-ல் இருந்து 123-ஆகக் குறைந்துள்ளது.

No comments:
Post a Comment