Wednesday, February 15, 2017

சிறைக்கு செல்லும் முன்.. கணவரை கட்டிப்பிடித்து கதறி அழுத சசிகலா!

பெங்களூரு: சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி ஆகியோர் இன்று பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தார்கள்.
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை குவித்த வழக்கு 21 ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம், நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது. அதன்படி ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேரும் குற்றவாளிகள் என்றும் 4 ஆண்டுகள் தண்டனை பெற வேண்டும் என்பது உறுதியானது.

இதனையடுத்து, ஜெயலலிதா மறைந்துவிட்ட நிலையில், சசிகலாவும் இளவரசியும் இன்று பெங்களூரு நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்கள். பின்னர், அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்னர், உறவினர்களிடம் பேசுவதற்கு 15 நிமிடங்கள் இளவரசிக்கும் சசிகலாவிற்கும் நேரம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, உறவினர்களுடன் பேசிக் கொண்டிருந்த சசிகலா தன் கணவர் நடராஜனுடன் பல விஷயங்களை பேசிக் கொண்டிருந்தார். அப்போது, சிறைக்கும் செல்லும் துக்கம் தாங்க முடியாமல் நடராஜனை கட்டிப் பிடித்து ஓ வென்று கதறி அழுதார் சசிகலா.
பின்னர், அவரை நடராஜன் சமாதானம் செய்தார். தனக்கு வழங்கப்பட்ட 15 நிமிடங்கள் முடிந்த நிலையில் சிறைக்கு சென்றார் சசிகலா.
source: oneindia.com

No comments:

Post a Comment

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...