காதலை சொல்ல புது டெக்னிக்... க்யூபிட் கடவுளாகும் ஃபேஸ்புக்!
பிப்ரவரி 14, காதலர் தினம் உலகமே தனக்கு பிடித்தமானவர்களிடம் காதலை சொல்லப்போகும் நாள். இதயம் முரளி மாதிரி தயங்கி தயங்கி சொன்னவங்க ஆரம்பிச்சு ரெமோ சிவகார்த்திகேயன் மாதிரி பலூன் பறக்க விட்டு ''ஓய் செல்ஃபி எனக்கு எப்போ ஓகே சொல்லுவனு'' விதவிதமா காதல சொல்லப்போறவங்களுக்காக ஒரு புதுமையை அறிமுகப்படுத்திருக்கு ஃபேஸ்புக்.
கடந்த வருடம் முதல் ஸ்டேட்டஸ், ஃபோட்டோ, வீடியோக்களுக்கு ''லைக்'' மட்டுமில்லாம ஹார்ட் எமோஜி போடவும் வழிவகுத்தது ஃபேஸ்புக். அதுல இருந்து தங்களோட காதலன் , காதலி டிபி மாத்துனா, குட் நைட் ஸ்டேட்டஸ் போட்டானு எல்லாத்துக்கும் ஹார்ட் எமோஜிக்கள பறக்க விட்ட ரோமியோ/ஜூலியட்களுக்கு பிப்ரவரி 13ம் தேதி இரவு ''வேலன்டைன் டே'' கார்டுகளை வெளியிட உள்ளது ஃபேஸ்புக். இதனை உங்களுக்கு பிடித்தமானவர்களுடன் அவர்களுக்கென பிரத்யேகமாக ஷேர் செய்யும் வசதியை அறிமுகம் செய்யவுள்ளது.
இதேபோல் 2016ம் ஆண்டு முடியும் போது இந்த வருடம் எப்படி இருந்தது என்ற ''இயர் இன் ரிவியூ'' சேவையை அறிமுகம் செய்து இந்த வருடம் நாம் என்ன செய்தோம் என்பதை வீடியோவாக காட்டியது. அது மட்டுமின்றி ஃபேஸ்புக்கின் பிறந்த நாளின் போது ''ஃப்ரெண்ட்ஸ் டே'' வீடியோவாக வெளியிட்டது. அதே மாதிரியான வேலை தான் இந்த முறையும் கையாண்டுள்ளது. வேலன்டைன் டே கார்டை லண்டனில் உள்ள ஃபேஸ்புக் பணியாளர்கள் உருவாக்கியுள்ளனராம்.
ஃபேஸ்புக்கில் தனிமனிதனின் கொண்டாட்டங்களின் போது ஃபேஸ்புக்கின் பயன்பாட்டாளர் பங்கேற்பு 25 சதவிகிதம் அதிகரிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மெஸெஞெசர்களிலும் வேலன்டைன் டே ஃபில்டர்களை அறிமுகம் செய்து மாஸ் காட்டுகிறது ஃபேஸ்புக்.
எல்லா விஷயங்களுக்கும் ஒரு சமூகத்தை உருவாக்கி அதனை உலகின் தொடர்பில் வைத்திருக்க வேண்டும் என்பது தான் ஃபேஸ்புக்கின் நோக்கம். காதல் உலகின் பெரும்பாலான மக்களை இணைக்கும் ஒரு விஷயம் என்பதால் இந்த விஷயத்தை கொஞ்சம் ஸ்பெஷலாக அணுகியுள்ளது ஃபேஸ்புக்.
ஃப்ரெண்ட்ஸ் டேயையே மாற்றிய ஃபேஸ்புக்:
ஃபேஸ்புக் தனது பிறந்தநாளான பிப்ரவரி மாதம் 4-ம் தேதியை 'Friends Day' என சொல்லி கொண்டாடி வருகிறது. 2015-ம் ஆண்டு பிப்ரவரி 4-ம் தேதி ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க், இது தொடர்பாக தனது பக்கத்தில், ஒரு ஸ்டேட்டஸ் பதிவிட்டிருந்தார். அதில் "இந்த நாள் நண்பர்களை கொண்டாட வேண்டிய நாள். அதுமட்டுமின்றி இன்று ஃபேஸ்புக்கின் பிறந்தநாளும் கூட. ஆனால் நீங்கள் ஃபேஸ்புக்கை கொண்டாட வேண்டாம். நட்பை கொண்டாடுவோம். நண்பனைக் கொண்டாடுவோம்" என அதில் கூறியிருந்தார். அப்போது அந்த ஸ்டேட்டஸில் மார்க் அறிமுகம் செய்ததுதான் இந்த friends day. அதன்பின்பு 2016-ம் ஆண்டும் இதேபோல பிப்ரவரி மாதம் 4-ம் தேதியும் நண்பர்கள் தினம் பற்றி ஸ்டேட்டஸ் போட்டவர், அத்துடன் நண்பர்கள் பற்றிய ஒரு குட்டி வீடியோ ஒன்றையும் சேர்ந்து பகிரும் ஆப்ஷனையும் அறிவித்தார்.
இதுமட்டுமில்லாமல் இயர் ஆஃப் ட்ராவல் என உலகம் முழுவதும் உள்ள மக்கள் தங்களது பயணம் குறித்த அப்டேட்டுகளை அளிக்கும் வசதியை தந்துள்ளது. அதிலும் காதல் படங்கள் வைரல்காட்டும் என்பதில் ஆச்சர்யமில்லை.மார்க் சக்கர்பெர்க் அவரது மனைவி பிரிசில்லாவை காதல் திருமணம் செய்தது குறிப்பிடத்தக்கது. தங்கள் காதல் தருணங்களையும் அவ்வப்போது மார்க் பகிர்வது அனைவரும் அறிந்ததே.
எப்படியோ பாஸ், காதலை கார்டு கொடுக்காம, புது டெக்னிக் மூலம் சொல்ல வைச்சது இதயம் முரளிக்களுக்கு கொஞ்சம் வசதியா இருக்கும். ரீயாக்ஷன் மாறினா ''தெரியாம கைபட்டு ஷேர் ஆகிடுச்சுனு சமாளிக்கலாம்னு இப்பவே ஸ்டேட்டஸ் தட்ட ஆரம்பிச்சுட்டாங்க ரோமியோ-ஜூலியட்கள். எப்படியோ பாஸ்..லவ் பண்ணுங்க லைஃப் நல்லா இருக்கும்னு எப்படியும் ஸ்டேட்டஸ் தட்டுவார் மார்க் சக்கர்பெர்க்....
No comments:
Post a Comment