Friday, February 24, 2017

ஜெயலலிதா பிறந்த நாளில் 69 லட்சம் மரக்கன்றுகள்: முதல்வர் தொடங்கி வைக்கிறார்

By DIN  |   Published on : 24th February 2017 04:51 AM  |    
palaniswamy
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 69-வது பிறந்த தினத்தை ஒட்டி, மரக்கன்றுகள் நடும் மாபெரும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.
இதற்கான நிகழ்ச்சி சென்னை தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. ஜெயலலிதாவின் 69-வது பிறந்த தினத்தை ஒட்டி, 69 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்படும் என ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இந்தப் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
கட்சி அலுவலகத்தில் விழா:
ஜெயலலிதாவின் பிறந்த தினத்தையொட்டி, அதிமுக தலைமை அலுவலகத்திலும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக அவைத் தலைவர் கே.ஏ.செங்கோட்டையன் நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று, விழா மலரை வெளியிடுகிறார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024