நிறம் மாறுகிறதா அ.தி.மு.க
எங்கும் பச்சை .. எல்லாம் பச்சை” என அ.தி.மு.க என்ற கட்சியின் அடையாளங்களில் ஒன்றாகிபோனது பச்சை நிறம். அதற்கு காரணம் முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க வின் பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதாவிற்கு ராசியான நிறம் பச்சை என்பதால் அ.தி.மு.கவினரும் பச்சை நிறத்தையே தங்களுக்கு ராசியான நிறமாக கருதிவந்தனர்.
ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு பச்சை நிறம் கொஞ்சம் கொஞ்சமாக அதன் முக்கியத்துவம் குறைந்துவருந்தது. குறிப்பாக சசிகலாவிற்கு ராசியான நிறம் பிங்க் என்று கூறப்படுகிறது. அ.தி.மு.கவில் போர்க்கொடி துாக்கிய பன்னீர் செல்வம் நாளை ஆர்.கே.நகரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும், பொதுக்கூட்டமும் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்க அடிக்கபட்ட போஸ்டர்கள் ஊதா நிறத்தில் உள்ளது. ஜெயலலிதாவின் படத்தோடு ஊதா நிறத்தில் இந்த போஸ்டர்கள் இப்போது பளிச்சிடுகிறது. பன்னீர் செல்வத்திற்கு ராசியான நிறம் ஊதா என்பதால் ஊதா நிறத்தில் இந்த போஸ்டர்கள் இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
No comments:
Post a Comment