சிறையில் வெள்ளை சேலை சீருடையில் சசிகலா: காலையில் புளிசாதம், மதியம் களி, இரவில் சப்பாத்தி
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் கடந்த புதன்கிழமை அடைக்கப்பட்டார். ரூ. 10 லட்சத் துக்கு அதிகமாக வருமான வரி செலுத்தும் தனக்கு ஏசி, தொலைக் காட்சி, வீட்டு சாப்பாடு உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய சிறப்பு அறை ஒதுக்க வேண்டும் என கோரினார். ஆனால் நீதிபதி அதனை ஏற்க மறுத்து, சிறைத்துறை நிர்வாகம் அளிக்கும் வசதிகளை ஏற்றுக் கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
இந்நிலையில் சசிகலாவின் முதல் நாள் சிறைவாசம் எவ்வாறு இருந்தது என பரப்பன அக்ரஹாரா சிறை அதிகாரிகளிடம் கேட்ட போது, “கடந்த 2014-ம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவுடன் சசிகலா அடைக்கப்பட்டு இருந்ததால் பல வசதிகள் கிடைத்தன. இந்த முறை எதுவும் செய்யப்படவில்லை.
வருமான வரி செலுத்துவதற் கான ஆவணங்களை தாக்கல் செய்ததால் சில வசதிகளுடன் கூடிய மகளிர் சிறையில் அறை ஒதுக்கப்பட்டுள்ளது. சிறையில் மற்ற பெண் கைதிகளுக்கு வழங்கப் படும் சீருடையான நீல நிற கறை கொண்ட வெள்ளைப் புடவை சசிகலாவுக்கு வழங்கப்பட்டது. அவர் ஏற்கெனவே அணிந்து வந்த அணிகலன்கள், உடைகள் ஆகியவை பெறப்பட்டு சிறை காப்பகத்தில் வைக்கப்பட்டது.
வீட்டு சாப்பாடு, வெளி மருந்து ஆகியவற்றுக்கு அனுமதி மறுக்கப் பட்டதால் சிறை மருத்துவமனையை சேர்ந்தவர்கள் சசிகலாவுக்கு நீரிழிவு நோய்க்கான மருந்துகளை வழங்கினர். இதையடுத்து நேற்று காலை 6.30 மணிக்கு காலை உணவாக புளிச்சோறு வழங்கப் பட்டது. காலை 11.30 மணிக்கு மதிய உணவாக கேழ்வரகு களியுடன் கூடிய சோறு, குழம்பு, மோர் ஆகியவை வழங்கப்பட்டது. இதே போல மாலை 4 மணிக்கு காபி வழங்கப்பட்ட நிலையில், 6.30 மணிக்கு இரவு உணவாக சப்பாத்தி மற்றும் காய்கறி கூட்டு வழங்கப்பட்டது.
இந்த உணவை எல்லோரையும் போல வரிசையில் நின்று சசிகலா பெற்றுக்கொண்டார். மாலையில் வெள்ளை சேலையில் சிறை வளாகத்தில் உள்ள அரச மரத்தடியில் நடைப்பயிற்சி மேற் கொண்டார். தற்போது பெங்களூரு வில் இரவில் கடுங்குளிர் நிலவுவ தால் சசிகலாவுக்கு கூடுதலாக 2 தரை விரிப்புகளும், 2 போர்வைகளும் வழங்கப்பட்டுள்ளன.
சிறைக்கு வந்த முதல் நாள் என்பதால் சசிகலா எந்த வேலையும் செய்யவில்லை. அவருக்கென்று பிரத்தியேகமாக சலுகைகளும், உதவிகளும் வழங்கப்படவில்லை. சசிகலாவின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கூடுதலாக 2 பெண் காவல் கண்காணிப்பாளர்கள் நிய மிக்கப்பட்டுள்ளனர். சசிகலாவுக்கு தியானம், யோகா செய்யும் வகை யில் தனி அறை வழங்கப் படவில்லை'' என்றனர்.
No comments:
Post a Comment