Tuesday, September 26, 2017

வட தமிழக மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு



மேற்கு வங்க கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி காரணமாக வட தமிழக மாவட்டங்களில் இன்று கனமழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறி உள்ளார்.

செப்டம்பர் 26, 2017, 04:15 AM
சென்னை,

இது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-


மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிகழ்வதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் பரவலாக மிதமான மழை பெய்துள்ளது. ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூரில் 11 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.

அடுத்து வரும் 2 தினங்களில் தமிழகம் மற்றும் புதுச் சேரியில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

31 சதவீதம் அதிகம்

சென்னையை பொறுத்தவரை இடைவெளி விட்டு சில முறை மிதமான மழை பெய்யக்கூடும். தென்மேற்கு பருவ மழையை பொறுத்தவரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த ஜூன் 1 முதல் 25-ந் தேதி வரை 39 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இது இயல்பைவிட 31 சதவீதம் அதிகம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேர நிலவரப்படி மழை அளவு வருமாறு:-

அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் பெருங் களூர், அரியலூர் மாவட்டம் திருமானூர் ஆகிய இடங்களில் தலா 11 சென்டி மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர், கரூர் மாவட்டம் பஞ்சப்பட்டி ஆகிய இடங்களில் தலா 10 சென்டி மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது.

வடமாவட்டங்களில் மழை

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், சேலம் மாவட்டம் மேட்டூர் ஆகிய இடங்களில் தலா 9 சென்டி மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது. பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூரில் 8 சென்டி மீட்டர் மழை அளவும், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளம், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சேலம் மாவட்டம் ஓமலூர், மதுரை மாவட்டம் மேட்டுப்பட்டி ஆகிய இடங்களில் தலா 7 சென்டி மீட்டர் மழை அளவும் பதிவாகி உள்ளது.

இதே போன்று மேலும் பல இடங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது.

No comments:

Post a Comment

Pilots drank bottled water purchased from outside vendor

Pilots drank bottled water purchased from outside vendor  The pilots also consumed bottled water purchased from an outside vendor.  British ...