Tuesday, September 26, 2017

கடைசி நேர முறையீடு : சுப்ரீம் கோர்ட் ஏற்க மறுப்பு
பதிவு செய்த நாள்25செப்
2017
20:23

புதுடில்லி: கேரளாவில், சில தனியார் மருத்துவக் கல்லுாரிகள் தொடர்பான வழக்கில், மருத்துவ கவுன்சில் கடைசி நேரத்தில், மேல்முறையீடு செய்ததை ஏற்று உத்தரவு பிறப்பிக்க முடியாது என, உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.
கேரளாவில், சில தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை எனக் கூறி, மாணவர் சேர்க்கைக்கு, மருத்துவ கவுன்சில் அனுமதி மறுத்தது. 

இதை எதிர்த்து, கேரள உயர் நீதிமன்றத்தில், மருத்துவக் கல்லுாரிகள் மனு தாக்கல் செய்தன. மருத்துவ கவுன்சிலின் உத்தரவை ரத்து செய்து, கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, மருத்துவ கவுன்சில் தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்றத்தில், நீதிபதி, பாப்டே தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

இந்த கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை முடிந்த நிலையில், தற்போது எந்த உத்தரவு பிறப்பித்தாலும், கல்லுாரிகள் மற்றும் மாணவர்களிடையே தேவையற்ற பீதியையும், குழப்பத்தையம் ஏற்படுத்தும்.
இறுதி நேரத்தில் செய்யப்படும் இந்த மேல்முறையீட்டு மனுவின் கீழ், உடனடி உத்தரவு பிறப்பிக்க முடியாது. மருத்துவ கவுன்சில் கல்வியாண்டு துவங்குவதற்கு முன், இந்த விஷயங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த வழக்கு விசாரணை, டிசம்பருக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

No comments:

Post a Comment

Pilots drank bottled water purchased from outside vendor

Pilots drank bottled water purchased from outside vendor  The pilots also consumed bottled water purchased from an outside vendor.  British ...