கவுரவம் காக்க பலியான 6 உயிர்கள் : நெருக்கடியை சமாளிக்கும் மனம் தேவை
பதிவு செய்த நாள்25செப்
2017
23:29

மதுரை: 'வாழ நினைத்தால் வாழலாம்; வழியா இல்லை பூமியில்...' என்ற கண்ணதாசன் வரிகள் எந்த மனநிலைக்கும் பொருந்தும். மதுரையில் தற்கொலை செய்து கொண்ட குறிஞ்சிகுமரன், வேல்முருகன் குடும்பத்தினருக்கு எப்படி மனம் ஒத்துக்கொண்டது. எறும்பு கூட வாழ வழிதேடும்போது மனிதனால் முடியாதா. எந்த சூழலிலும் நெருக்கடியை சமாளிக்கும் மனம் தேவை என்கின்றனர் மனநல நிபுணர்கள்.
மதுரை சவுராஷ்டிராபுரம் குறிஞ்சிநகர் 4வது தெருவை சேர்ந்த குறிஞ்சிகுமரன்,45, அவரது சகோதரர் வேல்முருகன்,47, ஆகியோர் கடன் தொல்லையால் அவதிப்பட்டனர். இவர்கள் இருவர் உட்பட குடும்பத்தை சேர்ந்த 6 பேர் நேற்றுமுன்தினம் விஷம் குடித்து தற்கொலை செய்தனர். நர்சரி பள்ளியை நடத்தி வந்த இவர்கள், பள்ளி விரிவாக்கத்திற்காக பலரிடமும் பல லட்சம் ரூபாய் பெற்றிருந்தனர். தவிர, தீபாவளி பண்டு, ஏலச்சீட்டு போன்றவற்றையும் கடந்த 5 ஆண்டுகளாக நடத்தி வந்தனர்.
இந்நிலையில் கடனை திரும்ப செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. வீடு உள்ளிட்ட சொத்துக்களை விற்று கடனை அடைக்குமாறு கடிதம் எழுதிவைத்து இரு குடும்பமும் விஷம் குடித்தது. இப்படி கடிதம் எழுதியவர்கள் அந்த சொத்துக்களை விற்று கடனை அடைத்துவிட்டு உயிர் வாழ்ந்திருக்கலாமே. இவர்களின் தற்கொலை முடிவு குறித்து மதுரை அரசு மருத்துவமனை மனநல நிபுணர் குமணன் கூறியதாவது:
இது மனநோயை சார்ந்தது. மனச்சிதைவு, அழுத்தம், உடல் ரீதியான பாதிப்பை தாங்க முடியாமல் தற்கொலை செய்கின்றனர். மனஉளைச்சல், மனம் சரியில்லாத போது எந்த முடிவும் எடுக்க வேண்டாம். பிரச்னைக்கு நண்பர், உறவினர்கள் மூலம் தீர்வு காணவேண்டும். உணர்ச்சி வசப்படும் போது தான் தற்கொலை முடிவு எடுப்பர். நீண்ட நாளாக திட்டமிட்டே இக்குடும்பத்தினர் முடிவை எடுத்திருப்பர்.
குடும்பத்தில் உள்ள ஒருவர் தற்கொலை முடிவை எடுத்து, அவரது பேச்சுக்கு கட்டுப்பட்டு மற்ற அனைவரும் சம்மதித்திருப்பர். தொழில் ரீதியாக சூழலை அறிந்து தங்களை தயார்படுத்த வேண்டும். நடைமுறைக்கு சாத்தியமானதை சிந்தித்து புத்திசாலித்தனமாக செயல்பட்டால், தொழில், குடும்பம் சிறக்கும். நெருக்கடியை சமாளிக்கும் மனம் தேவை.
கூட்டுக்குடும்ப வாழ்க்கை அனைத்து விஷயத்திற்கும் நல்லது தான். ஆனால், அக்குடும்ப தலைவர் திடமாக இருத்தல் வேண்டும். அவர் தவறான முடிவு எடுத்தால் குடும்பத்திற்கே பாதிப்பு வரும். கவுரவம் காக்கவே மதுரையில் 6 பேர் தற்கொலை செய்துள்ளதாக தெரிகிறது.
தொழில், குடும்ப செலவிற்கு கடன் பெறுவோர், தங்களின் குடும்ப சூழல் அறிந்து கடன் பெற்றால் பிரச்னையை சமாளிக்கலாம், என்றார்.
போலீசார் கூறியதாவது: சகோதரர்களுக்கு கடன் கொடுத்தவர்கள் யாரும் நேற்று மாலை வரை புகார் கொடுக்க வரவில்லை. பண்டு சீட்டு போட்டவர்களுக்கு, நேற்று மதியம் 12:30 மணிக்கு பணம் தருவதாக குறிஞ்சிகுமரன் தெரிவித்துவிட்டு தற்கொலை முடிவை
தேடி இருக்கின்றனர், என்றனர்.
நேற்று மதியம் 6 பேரின் உடலும் கீரைத்துறை மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. விருதுநகர் பொறியியல் கல்லுாரி விடுதியில் தங்கி படிக்கும் வேல்முருகன் மகன் பிரவீன், இறுதி சடங்குகளை செய்தார்.

No comments:
Post a Comment