பரவிய வதந்திகளால் பதற்றம்
தமிழகம் முழுவதும், நேற்று திடீரென பரவிய வதந்திகளால், ஆங்காங்கே பதற்றமும், பீதியும் ஏற்பட்டது.
'மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்ட, ஆயுதப்படை போலீசார், உடனடியாக தலைமையிடத்திற்கு திரும்ப வேண்டும். மாவட்ட போலீசாரை பயன்படுத்தி, சட்டம் - ஒழுங்கை பராமரிக்க வேண்டும்' என, மாவட்ட எஸ்.பி.,க்கள் மற்றும் கமிஷனர்களுக்கு, போலீஸ் டி.ஜி.பி., அனுப்பிய கடிதம், நேற்று மாலை வெளியானது.
இது, வழக்கமான நடைமுறை என்ற போதிலும், 'மாநிலம் முழுவதும், போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். ஏதோ நடைபெற உள்ளது. அசம்பாவிதங்களை தவிர்க்கவே, டி.ஜி.பி., இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்' என, தகவல் பரவியது. இதை, டி.ஜி.பி., மறுத்தார்.
'ஆயுதப்படை போலீசார், தலைமையிடம் திரும்புவது வழக்கமானது' என, விளக்கம் அளித்தார்.
அதைத் தொடர்ந்து, 'உள்துறை செயலர், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, போலீஸ், டி.ஜி.பி., ஆகியோர், கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினர். எனவே, ஆட்சி கலைக்கப்படலாம் அல்லது சட்டசபை முடக்கப்படலாம்' என்ற தகவலும் பரவியது. உடனடியாக, 'அதிகாரிகள் யாரும், கவர்னரை சந்திக்கவில்லை' என்ற விளக்கத்தை,ராஜ்பவன் வட்டாரம் தெரிவித்தது.
சென்னை, தலைமை செயலகத்தில், நேற்று மாலை, 4:30 மணிக்கு, தலைமைச் செயலர், கிரிஜா வைத்தியநாதன் தலைமையில், சட்டம் - ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கும், ஆட்சி கலைப்பு தகவலுக்கும், முடிச்சு போடப்பட்டது. 'இக்கூட்டம், ஒவ்வொரு மாதம் இறுதியிலும் நடைபெறும். இம்மாத இறுதியில், விடுமுறை வருவதால், முன்னதாக நடத்தப்படுகிறது' என, அதிகாரிகள் தரப்பில் அவசர விளக்கம் அளிக்கப்பட்டது.
எனினும், வதந்திகள் குறையவில்லை. தி.மு.க., தலைவர், கருணாநிதி, சசிகலாவின் கணவர், நடராஜன் உடல் நலம் குறித்தும், வதந்திகள் பரவின. அதற்கும், சம்பந்தப்பட்ட தரப்பில் மறுப்புதெரிவிக்கப்பட்டது.அடுத்தடுத்து பரவிய வதந்திகளால், மாநிலம் முழுவதும் மக்கள் பதற்றம் அடைந்தனர்.
காரணம் என்ன?
திடீர் பதற்றம் குறித்து, டி.ஜி.பி., அலுவலக உயர் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில், சில தினங்களுக்கு முன், 'நீட்' நுழைவுத் தேர்வுக்கு எதிராக, பல இடங்களில் போராட்டங்கள் நடந்தன. அதை கட்டுப்படுத்த, பட்டாலியன் எனப்படும், சிறப்பு காவல் படை போலீசார், காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் என, பல மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்க பட்டனர். தற்போது, போராட்டம் தணிந்து இயல்பு நிலை திரும்பிய பின்னும், சிறப்பு காவல் படை போலீசார், திருப்பி அனுப்ப படாமல் இருந்தனர்.அவர்களை, மாவட்டங்களில், வேறு பணிக்கு பயன்படுத்தி வந்தனர்.
இதனால், 'சிறப்பு காவல் படை போலீசாரை, உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும். அதுபற்றி, இன்றும், நாளையும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்' என, டி.ஜி.பி., உத்தரவிட்டார். இந்த உத்தரவு, தவறாக புரிந்து கொள்ளப்பட்டதால், பதற்றம் ஏற்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர்

No comments:
Post a Comment