Wednesday, February 15, 2017



பூனை குறுக்கே போனால் என்ன அர்த்தம் ??

பூனைகள் எப்போதும் குடியிருப்புகள் நிறைந்த
பகுதிகளில் தான் இருக்கும்.

மன்னர்கள் காலத்தில் போருக்கு படை திரட்டிச்
செல்லும் வழியில் பூனையை பார்த்தால், இந்த
வழியில்
குடியிருப்புகள் இருக்கிறது.

அங்கே இருக்கும்
ஆண்மகன்கள் அனைவரும்
போர்க்களத்திற்கு சென்றிருப்பார்கள்.
அங்கே சிறுவர்கள், வயதானவர்கள்,
பெண்கள் மட்டுமே இருப்பார்கள்.

ஆகவே இந்த வழியாக சென்றால் அவர்கள்
பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக, அவர்கள் வந்த
திசையை மாற்றி வேறு திசையில் செல்வார்களாம்.

மேலும் அக்காலத்தில்
போக்குவரத்துக்கு பெரும்பாலும்
குதிரையை பயன்படுத்தினர்.

பூனையைப் பார்த்தால் குடியிருப்புகள் இருக்கும்
என உணர்ந்து,
யாரும்
அடிபட்டுவிடக் கூடாது என்பதற்காக குதிரையில்
மெதுவாக செல்வார்களாம்.

அதனால்தான் பூனை குறுக்கே போனால் அந்த
வழியாக செல்லக்கூடாது என்றார்கள்.

நம் முன்னோர்கள் சொல்லி வைத்த இதுபோன்ற பல
விஷயங்களை காரணம்
தெரியாமலேயே இன்று வரை கடைபிடிக்கிறோம் .

பல விஷயங்கள் மூட நம்பிக்கைகளாகவு ம்
திரிக்கப்பட்டுவிட்டது.

பூனை குறுக்கே போனால் அந்த வழியாகப்
போகக்கூடாது என்ற
விஷயத்தை கடைபிடிக்க வேண்டிய அவசியம்
தற்போதைய கால கட்டத்தில் தேவை இல்லை.

இனிமேல் பூனை குறுக்கே போனால் என்ன அர்த்தம்??

பூனை ஏதோ அவசர வேலையா வெளியே போகுதுன்னு அர்த்தம்!!!!!!







No comments:

Post a Comment

MUHS chalks out plan to prevent paper leaks

MUHS chalks out plan to prevent paper leaks  Ranjan.Dasgupta@timesofindia.com 12.01.2025 Nashik : The Maharashtra University of Health Scien...